top of page

தீபாவளியும் -மாப்பிள்ளை வருகையும்

தீபாவளி பண்டிகை பிராமணர்கள் குடும்பங்களில் கலாச்சாரங்களின் தொட்டில் ,தலை தீபாவளி மாமியார்களின் கடை கண் பார்வை மாப்பிள்ளையை நோக்கியதாகும்.

மாப்பிள்ளை பெண் வருகைக்காக குடும்பமே வாசலை பார்த்து இருக்கும்.


அக்ரஹாரத்தின் அழகே கூண்டு வண்டியும் மாடும் ரேக்லா வண்டி- வண்டி மாடுகள் மாப்பிள்ளையை விடவும் கம்பீரமாக இருக்கும். சிவனின் வாகனமாயிற்றே அதன் வனப்பு அப்பப்பா கொள்ளை அழகு.மாப்பிளை பெண்ணை அழைத்து வர ரெடியா இருக்கும்.


காரிருள் 5 மணிக்கே இருள் சூழும் பாட்டிகள் முறுக்கு மாவும் ரெடி பண்ணவும் மாட்டுப்பெண்ணை குத்தலா பேசவும் வீடே அமர்களப்படும் தீபாவளி .


ஆனந்த விகடனில் என்ன தொடர் ஆரம்பம் குமுதத்தில் சாண்டில்யன் கதை வருமா வராதா கல்கியில் லெஷ்மி கதை உண்டா இல்லையா என்ன என்ன சினிமா ரிலீஸ் ஆறது முதல் ரவுண்ட் இரண்டாவது ரவுண்டா ...


குங்குமத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் துப்பறியும் நாவல் மணியனின் அக்கரை சீமையின் அழகு இப்படி நீண்டு கொண்டும்.


தீபாவளி களை கட்டும் ஒரு தீபாவளிக்கு இளமை ஊஞ்சலாடுகிறது ஸ்ரீதர் படம் ரிலீஸ்.இப்படி பசுமையான நினைவுகளுடன் தீபாவளி.


சென்ற நூற்றாண்டுகளில் பிரத்யேகமான ஆடைகளே அந்த வருடத்தின் சிறப்பாக கொண்டாடுவோம்.

70 பது 80 களில் அணி வகுத்த டர்லின் ஸ்பன் ரக துணிகள் நைலக்ஸ் ரக புடவைகள் பாம்பே டையிங் பாவாடை துணிகள் பிரபலம்.

70 ன் பிற்பகுதியில் வந்த ரிலையன்ஸ் மக்களின் கனவு கோட்டையானது.


தீபாவளி முதல் நாள் களைட்டும் விறகடுப்பில் தேன்குழல் முறுக்கு மைசூர் பாகு சும்மா ஜல்லிக்கல்லை போல் ஸ்டாங்கா வரும் பூந்தி லாடு விண்ணுன்னு கண்ணை உறுத்தும்.


* *பாட்டி மட்டும் தான் மருந்து கிளருவா அது என்னமோ குடும்ப பேட்டன் ரைட்டை யாரிடமும் விட்டுத்தர மாட்டா. திப்பிலிகள் சுக்கு அதி மதுரம் கிராம்பு இப்படி மூலிகை சாமான்களை ஒருவாரம் முன்னாடியே வாங்கி வருத்து உரலில் இடித்து வைத்து விடுவாள்.அதன் வாசனையே சும்மா அள்ளும்.அதை அப்படியே குழம்பாக்கி கிளருவா பாருங்கோ நல்ல எண்ணையும் மருந்து சாமானும் கல் சட்டியில் சும்மா ஊரையே கூட்டும் வாசனையில். நெய்யும் தேனும் வெல்லமும் கலந்தவுடன் மறு நாள் காலைக்கு ரெடியாயிடும் தீபாவளின் சிறப்பே மருந்து தான்**.


மாப்பிள்ளைக்காக இரவு விருத்து .வெங்காய சாம்பார் கத்தரிக்காய் நல்ல எண்ணை கறி வதக்கல் உருளைக்கிழங்கு போண்டா சும்மா டாப் டக்கராகும். கத்தரிக்காய் நல்ல எண்ணை நல்ல காமினேஷன்.


அதிகாலை வெந்நீர் பானையில் வெந்நீர் போடுவதில் கில்லாடிகள் தாத்தாக்கள் .3 மணிக்கு எழுந்து கொல்லை புறத்தில் கிணத்தை ஒட்டியவாரு தனி அறை அமைக்கப்பட்டிருக்கும். வென்நீர் போடுவதே அலாதியான அழகு.அதற்குள் கட்டுத்தரியில் மாடு அம்மான்னு கத்தும் சும்மா அசால்டா சாணியை நகர்த்திவிட்டு ஒரு சொம்பு நிறைய அப்பா பால் கறப்பார். *சிலராத்தின் ஆப்பளை மடியை தொட முடியாது கூச்ச சுபாவம் அந்தாத்து மாட்டுப்பெண்ணோ யாராவது பொம்மனாட்டிகள் மாடு கறப்பா


சிலர் ஆத்தில் மாமி பால் கறப்பதே அழகு. நான்கு மணி சுமாருக்கே காப்பி டிகாஷன் வாசனை வெடி மத்தாப்பு வாசனையை மிஞ்சும்


வெடி வெடிப்பதே அலாதியாய் தெரியும் அக்கிரஹார வாசிகள் சும்மா தூள் கிளப்புவாங்க. வெடிக்காத வெடி மருந்தை வெடி செய்து அதை வெடிக்க செய்யும் போது உள்ள மகிழ்ச்சியே மகிழ்ச்சி.


சுவாமி விளக்கு ஏற்றப்பட்டிருக்கும் சுவாமி முன்பு பட்ஷணம் துணிகள் மருந்து எண்ணை சீயக்காய் என அணி வகுக்கும். அப்போது தான் தாத்தாவை தேடுவார்கள் அவரும் புங்கை மரத்தின் குச்சியில் பல் தேய்த்தவாரு வருவார்.*பாட்டி தாத்தாவை சகட்டு மேனிக்கு திட்டித்தீர்ப்பாள் இந்த பிராமணன் எதையும் ஒழுகா செய்ய மாட்டான். பாவம் பாட்டி திட்டும் பொருள் இப்போதுதான் தெரியறது. தாத்தாவும் சுவாமி கிட்ட வந்து எண்ணை வைத்துவிடுவார் சுகமா தூக்கம்.ஆனாலும் சீனியாரிட்டி படி தான் எண்ணை தேய்ப்பார். பெரிய குடும்பமா இருந்தா இரண்டு மூன்று பேர் மாட்டுப்பெண் இருப்பாள்.அவளுக்கு எண்ணை வெய்க்கும் போது தாத்தா குஷியாயிடுவார்.


இப்படி அமர்களப்பட்டு தீபாவளி சரவெடி புஸ்வானம் என கிழக்கில் சூரியனை வரவேற்கும். மேகத்தால் மங்கலாய் தென்படும் சூரியன் வீர்ரென ஒளிவீசும் அழகே அழகு.


இப்படி அக்ரஹாரம் எங்கு ஒளி வீசிய தீபாவளி அக்ரஹாரமும் ஆறு அழகும் ஆல் வேல் மரங்கள் அக்கிரஹார அழகில்லாமல் வாடி மெலிந்துள்ளது.


*Happy Diwali...Happy யான அக்ரஹார கலாச்சாரம். தேவதைகளான நம் குல? விளக்குகள்.


*The light of Diwali whereas brought up our family women and children's .. கொண்டாடுங்கோ நம் கலாச்சாரத்தையும் நம்மாத்து குழந்தைகளையும் பெண்களையும். போற்றுங்கோ எங்கு இருந்தாலும் நம்ம கலாச்சாரத்தை விடாதீங்கோ. **பெண் குழந்தைகள் நம் குலம் காக்கும் தேவதைகள் அவர்களிடம் சொல்லி சொல்லி வளர்ங்கோ நம் வழக்கத்தையும் பெறுமையையும் அந்த அறிவு ஜீன்களுக்கு குறிவைத்து தாக்குதல் நடை பெறுகிறது *அவர்களை நம் கவனத்தில் போற்றி போற்றி வளருங்கோ. சம்பளம் கம்மின்னாலும் பெண்ணை கொடுக்க தயாராகுங்கோ இது அம்மாக்களுக்கான அட்வைஸ்.


*Happy Diwali


தாம்ராஸ்.

பட்டுக்கோட்டை.

நாள்.30.10.2024.

75 views0 comments

Comments


bottom of page