தேவன்குடி - ஸ்ரீ ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் உற்சவம் - 2023
திருவாருர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலத்துக்கும் அருகில் உள்ள தேவன்குடி கிராமத்தில் 500 வருஷங்களுக்கும் பழமையான ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் இருக்கிறது . திருப்பணி நடந்து வரும் அக்கோயிலில் வருகிற நவம்பர் 16ம் தேதி [வியாழன் ] மதியம் முதல் விஷ்ணுபதி புண்ணிய கால உற்சவங்கள்தொடங்கி 17ம் தேதி ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. 18ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஸ்ரீ ராமர் கோயில் ஸம்ப்ரோக்ஷணம் நல்ல முறையில் நடைபெறவும் உலக மக்கள் க்ஷேமத்திற்கும் பகவான் ஸ்ரீராமர் அருள் வேண்டி அகண்ட ராம நாம ஜபம் நடக்கிறது. மூன்று நாட்களுக்கும் பிரசாத விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லா பக்தர்களும் வந்து ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் ஸமேத ஸ்ரீ கோதண்டராமரின் அனுக்ரஹத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஆஸ்திக மஹாஜனங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .கோயில் லொகேஷன் பார்க்க: https://maps.app.goo.gl/xqV1onR71Fpr217GA மேலும் விபரங்களுக்கு Dr சுந்தரம் @ 9480173760 or கோபாலன் @9840941499 தொடர்பு கொள்ளவும்