பாரம்பரியம் மிக்க நமது சனாதந தர்மத்தில் தொன்று தொட்டு தொட்டு இருந்து வருகின்ற பழக்கமாக, இயற்கையை வழிபடுவது என்பதாம். அதன் அங்கமாக பக்தி ஶ்ரத்தையுடன் வனம் மற்றும் மரங்களை வழிபடுவது மரபு. இதனால் இயற்கை வளம் பெருகும். மழை காலத்தே போதுமான அளவு பெய்து, மனித குலம் உட்பட அனைத்து உயிரினங்களும் பாதுகாக்கப் படுகின்றன. வனமஹோத்ஸவம் எனும் மரங்கள் நட்டு வளர்த்து வருவதை நமது ஆச்சார்ய குருவரர்கள். ஊக்குவித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் மஹாபாரதம் சுக்ர நீதி போன்ற இதிஹாஸ புராணங்களை மேற்கோள் காட்டி “மரங்களே பிள்ளைகள்” எனும் தலைப்பில் ஒரு உன்னத நூலை ப்ரும்மஶ்ரீ சுந்தர்ராம வாஜபேயர் அவர்களைக் கொண்டு எழுது வெளியிட ஊக்குவித்தார்கள். மரங்கள் வளர்ப்பது பற்றிய அரிய பல தகல்வல்கள் கொண்ட இப் புத்தகத்தை அன்பர்கள் படித்து பயன் பெற வேண்டுகிற்றோம். புத்தகம் பெறுவது பற்றி முதல்வர், ஶ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் @ +91 94434 85177அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
மரங்களுக்கு திருமணம் செய்வது புனிதமானது; உயர்நீதிமன்றம் கருத்து -
Comments