top of page

நம் பழக்க வழக்கங்கள்

ஸ்ரீ ராமஜயம்

இந்த கட்டுரையில் பிராமணர்களாகிய நமது இன்றைய பழக்க வழக்கங்களை பற்றி சற்று சிந்திப்போம் .

இன்று நமது பழக்க வழக்கங்கள் காலம் சென்ற நமது முதியோர்களின் பழக்க வழக்கங்களில் இருந்து பெருமளவில் மாறு பட்டு இருப்பதை காண முடிகிறது . இவ்வாறான மாறுபாடுகள் காலத்தில் ஏற்படுகின்றன . அவை சகஜமே . ஆகையால் அவற்றில் குற்றம் ஏதும் காண இயலாது . இன்றைய யுவர்களுக்கு அவர்கள் அனுபவித்து வரும் பழக்கங்களும் வழக்கங்களும் தான் அவர்களுக்கு தெரியும் . ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்தால் அது செய்பவரது பழக்கமாகிறது . அதுவே காலாந்தரத்தில் வழக்கமாகவும் ஆகிறது . இதிலிருந்து நமக்கு தெரிவது நமக்கு நல்ல பழக்கம் வேண்டுமென்றால் நல்ல எண்ணம் , சிந்தனை, நல்ல பேச்சு , நல்ல சேர்க்கை (சத் சங்கம் ) ஏற்பட வேண்டும் . நல்ல எண்ணம் தாய் தந்தையிடமிருந்து வர வேண்டியது . நல்ல சிந்தனை பள்ளிக்கூடத்தில் கற்றுத்தரும் ஆசான் இடமிருந்தும் , பள்ளிக்கூட புத்தகங்கள் இடமிருந்தும் , நல்ல பேச்சுத்திறன் ,பேசும் பாணி இவையெல்லாம் அண்டை அயலாரிடம் இருந்தும் , பேசும் தன்மை (இதமாகவும் ,அடாவடியில்லா மலும் இருப்பது ) கூட்டுக்குடும்ப முறையில் தம்முடன் கூட வசிக்கும் தமது நெருங்கிய உறவினரிடமிருந்தும் , நல்ல சேர்க்கை என்பது தமது நெருங்கியவும் உற்றவர்களுமான தமது நண்பர்களிடமிருந்தும் -அதன்னியில் தான் படிக்கும் நல்லறிவு புகட்டும் நூல்களிடமிருந்தும் (உதாரணம் : பகவத் கீதை ,இராமாயணம் , பாகவதம் மகாபாரதம் , முதலிய நூல்கள் ) வருகின்றன .

சமுதாயத்தில் உள்ள எல்லா பிராமண யுவர்களும் எல்லா விதத்திலும் மேன்மையுற வேண்டும் என்பது நம்முடைய அவா . அதற்கு மேற்கூறிய வழியில்லாது வேறு இல்லை. இன்று உள்ள நமது பிராமண யுவர்களும் அவர்களது பெற்றோர்களும் மனம் வைக்க வேண்டும். அவ்வழியில் செயல்படவும் வேண்டும் .

எப்படி ?

ஆண்டாண்டு காலமாக நம்மிடையே நிலவி வருபனவும் , நம்முடைய முன்னோர்களால் பின்பற்றப்பட்டவைகளுமான வேத ஸ்ம்ரிதி பூர்வமான சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவைகளை

மதித்து ,அவற்றை அனுஷ்டிக்க முயல வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் அன்பு, இன்சொல், பொறுமை, பிறர்பொருளுக்கு ஆசைப்படாமை ,ஆணவமின்மை, போன்ற குணங்களை கடைப்பிடிக்க முயலவேண்டும் . எளிய வாழ்க்கை வாழ்தல் , ஸாத்விகமான ஆகாரத்தை அளவோடு உண்ணுதல் இவற்றை கடைப்பிடிக்க வேண்டும். மேற்சொன்னவைகள்தான் நமது பழக்கங்களாக இருக்க வேண்டும் .

ச. சிதம்பரேச ஐயர்

15 நவ 2022

18 views0 comments

コメント


bottom of page