தக்ஷிண உப பட்டாபிஷேகம் ஸ்ரீ ராமருக்கு நடந்த தேவன்குடி
தேவர்கள் ரிஷிகள் வந்து வணங்கிய தமிழகத்தின் அயோத்தி இந்ததேவன்குடியின்[pin:612803] ஸ்தல வரலாறு
ஸ்ரீ தசரத சக்கரவர்த்தி உரிய காலத்தில் ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக யோசித்து தன் குல குருவாம் ஸ்ரீ வசிஷ்ட முனிவர் ,ஸ்ரீ விஸ்வாமித்திரர், ஸ்ரீ ஜனகர் மற்றும் பெரியோர்களின் ஆலோசனையின் பெயரில் பட்டாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நாள் குறிக்கப்பட்டது.
கைகேயிக்கு ஸ்ரீ தசரத சக்கரவர்த்தி கொடுத்த இரண்டு வாக்குறுதியின் பேரில் பட்டாபிஷேகம் நடைபெறாமல் ஸ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று .அப்போது வந்திருந்த தேவர்கள் இந்த ஊரில் தங்கி இருந்ததால் இந்த ஊர் தேவங்குடி என்றும் ரிஷிகள் தங்கி இருந்த அருகில் உள்ள ஊரை ரிஷியூர் என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ வசிஷ்டர் பட்டாபிஷேகத்திற்கு குறித்த நாள் சிறிதளவும் பிசகாமல் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே நாளில் ஸ்ரீ ராமபிரானுக்கு சகல தேவாதி தேவாதி தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் தக்ஷின உப பட்டாபிஷேகம் துளசி செடிகளின் மத்தியில் பாத பூஜையோடு இந்த தேவன்குடியில் நிறைவேறியதாக பழைய சரித்திரங்களில் விபரம் இருக்கின்றது
ஆலயத் திருப்பணிகள் நிறைவடைந்து 28.4.2024 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று ஊராரும், பெரியோர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர். திருப்பணிக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதால் உலகெங்கும் உள்ள ஸ்ரீராம பக்தர்கள் உதவி ஸ்ரீராமனின் கருணை கடாக்ஷத்திற்கு ஆளாக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Account name: DEVANGUDI SRI KOTHANDA RAMASWAMI TEMPLE KAINKARYA SABHA
Account No: 510909010240371
IFSC:CIUB0000286
Selaiyur Branch
Chennai 600073
ஆலயத் தொடர்புக்கு - Dr சுந்தரம் 9480173760
Comments