கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.
திருமலை திருவேங்கடவன் திருப்பாதம் அருகே மிக மிக அருகே, பெரிய பெருமாளை, தம் தாமரைக் கண்களால் பருகி நிற்கும்
எம் பெருமானாம் ஶ்ரீபெரியவாளையும் ஶ்ரீபெருமாளையும் சேர்த்தே சேவிக்கும் பேறு பெற்றேன்.
குருவருளும் திருவருளும் ஒருசேரக் கிடைத்த தனிப் பெரும் பேறு பெற்றேன்.
அத்வைதம் தந்து உடன் அறுசமய நெறியும் தந்த ஆதிசங்கரர், ஈராயிரமோடு அரையாயிரம் ஆண்டுக்கு முன்பே வணங்கித் தொழுத குறையிலா கோவிந்தனை, शम्भोमूर्तिश्चरतिभुवने शन्कराचार्यरूपा எனும் வித்யாரண்யரின் வாக்கிற்கிணங்க, ஆதி சங்கரரின் அவதாரமான,
எம் கலி தீர்க்கும் கருணா மூர்த்தியாம் காஞ்சி பெரியவாளையும் ஒன்றாய், இரண்டும் ஒன்றெனவே கண்டேன்; அதுவே அத்வைதம் என அறிந்தேன். கலிவரதனைக் கண்ணார பருகியே காணும் இக் காஞ்சி பெரியவாளே எம் குலப் பெருமாள் எனக் கண்டு கொண்டேன், எம் பரம்பரையையே இவர் தாமரைத் திருவடியில் கிடத்தி நிற்கின்றேனே.
-Sri Sethu. Ramachandran I. A. S (R)
Comentarios