The Grammatical Meaning of 'Rameswaran' and Maha Periyava's Explanation
रामेश्वरन् என்பது எtiltrந்த ஸமாஸத்தை சேர்ந்தது ?
இதோ மஹா பெரியவா அளித்த விளக்கம்:
ராமனுடைய ஈசுவரன் ராமஸ்ய ஈச்வர: வா அல்லது ராமனுக்கே ஈசுவரனா ?
இந்த சந்தேகம் தேவர்களுக்கு ஒரு முறை ஏற்பட்டது . சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள ராமனுடைய ரூபமாக விளங்கும் மஹாவிஷ்ணு விடமே கேட்டு விடலாம் என்று சென்றனர்.
வைகுண்டத்திற்கு போய் பெருமாளிடம் கேட்டதற்கு அவர் "இதில் என்ன சந்தேகம் இது தத்புருஷ ஸமாஸந்தான் ராமஸ்ய ஈச்வர: ராமேச்வர: " எனக்கும் அவர் ( பரமேஷ்வரன்) தான் ஈசுவரன் என்று சொல்லிவிட்டாராம்.
विश्णुस्तत्पुरूषं ब्रूते
மஹாவிஷ்ணுவை குணபூர்ணன் என்று அழைக்கிறோம். சர்வ சத்குணங்களும் நிறைந்தவர். இதில் அடக்கம் என்ற குணமும் உள்ளது. ஆகையால் இப்படி சொல்கிறார் என்று தேவர்கள் நினைக்க, பின் சரி இந்த ஸமாஸ சந்தேகத்தை பரமேஷ்வரனிடம் தீர்த்துக் கொள்வோம் என்று கைலாயம் சென்றனர்.
அங்கு சென்றவுடன் கைலாசபதியை நமஸ்கரித்து தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அவரோ "இதிலே உங்களுக்கு என்ன சந்தேகம் அது பஹுவ்ரீஹி ஸமாஸந்தான் என்று சொல்லிவிட்டாராம்.
बहुव्रीहिं महेश्वरः
தேவர்களுக்கு இப்போது சங்கடம். இது என்ன ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கே. பெருமாளும், மஹேஷ்வரணும் இவ்விஷயத்தில் சம்பந்தபட்டவர்கள் ஆதலால் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பதிலளித்தனர் என்று தீர்மானித்து தேவர்கள் இவ்விருவருக்கும் மத்தியஸ்தமாக இருக்கும் பிரம்மாதான் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்வார் என்று பிரம்மலோகம் சென்றனர்.
அவரிடம் रामेश्वरन् பதத்தின் ஸமாஸத்தை கேட்க அவரோ "இது என்னடா நமக்கு தர்மசங்கடம் என்று நினைக்க
आत्मभूः कर्मधारयम् ।।
பிரம்மாவுக்கு ஆத்மபூ: என்று ஒரு பெயர்.
மேலும் அவர் விளக்கினார் : रामेश्वरन् என்பது கர்மதாரய ஸமாஸம். வீரராகவன் என்றால் வீரனான ராகவன் என்று எப்படி பொருள் படுமோ அது போல். வீரன் வேறு அல்ல ராகவன் வேறு அல்ல என்பது போல் பொருள்படும். रामश्च असौ ईश्वरश्च रामेश्वरः என்று மேலும சொன்னார்.இருவரும் வேறல்லர் இருவரும் ஒருவரே. இது கர்மதாரய ஸமாஸம் தான் என்று முடித்து வைத்தார்.
विश्णुस्तत्पुरूषं ब्रूते बहुव्रीहिं महेश्वरः।
उभयोर्यप्यतृप्तानाम् आत्मभूः कर्मधारयम् ।।
ஸத்குரோ பாஹிமாம்!🙏
Comments