Travelogue by Sri. Venkateswaran (Pattukottai)
-இந்த கட்டுரை அமரர் சா.விஸ்வநாதஐயர் நினைத்து எழுதியது அவருக்கு சமர்பணம் - சாவி
ஜம்மு காஷ்மீரில் ஜம்முவில் உள்ள கத்ரா என்ற ஊரில் உள்ளது வைஷ்ணவாதேவி ஆலயம். இது ஒரு குகைக்கோவில். நாடெங்கிலுமிருந்து ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் நாள் தோறும் வந்து தேவியை வணங்குகின்றனர். கத்ராவிலிருந்து 17 கிலோமீட்டர் மலைப்பாதையில் கடல் மட்டத்திலிருந்து 9ஆயிரம் அடி உயத்தில் உள்ளது.
ரம்மியமான மலைச்சாரல் ஐஸ் கட்டி உருகி கல்கண்டாய் சில்லென்று ஒடும் சட்டஜ் நதிக்கரை பள்ளத்தாக்கென இயற்கை *அம்பலத்தான் ஆனந்த கூத்தாடும் இமயத்தின் அடிவாரம்.
தண்ணீரும் காற்றும் ஆனந்தத்தின் உச்சம் நல்ல காஷ்மீர் மிளகாய் நிறத்தில் மக்கள் கபடு சூது தெரியாமல் நம்மிடம் பழகிய விதம் பட்டர் கலந்த ரொட்டியில் ராஜ்மா சப்ஜியில் அடாடா சுடசுட அவர்கள் கொடுத்த விருந்நோம்பல் இப்படிப்பட்ட மக்களை நம்மோடு பிரித்தது அரசியல் என்கின்ற போது ஏமாற்றமளிக்கிறது
*இரண்டு இரவு கத்ராவில் தங்கியிருந்தோம் கோடைகால காஷ்மீர். ஏசியில்லாத குளிர் காலை 6மணிக்கெல்லாம் வென்நீரில் குளித்துவிட்டு தேவி தரிசிக்க கிளம்பி விட்டோம். நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில்லிருந்து வைஷ்ணவாதேவி மலை அடிவாரம் வரையில் பேட்டரி ஆட்டோவில் தலைக்கு 10 ரூபாய் வீதம் கொடுத்து சென்றோம் ஜிலு ஜிலு காற்று அதை வர்னனை செய்ய மொழியில்லை அப்படி ஒரு ரம்யமான காலைப்பொழுது.
வைஷ்ணவாதேவி தரிசிக்க மலைப்பயணம். மலையில் செல்ல குதிரைப்பயணம் நடைபயணம் அல்லது டோலி அதாவது மனிதனை மனிதன் தூக்கிக்கொண்டு செல்வது. 4நபர்கள் பல்லாக்கு வடிவில் நம்மை தூக்கிச்செல்கின்றர்.
நாங்கள் குதிரை சவாரி மேற்கொண்டோம். குதிரை சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ 1600 கேட்கின்றனர் .அதை அந்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. ஓப்பனாக ரூபாய் 1250 பணம் செலுத்தி டோக்கன் வாங்க வேண்டும். மீதி பணத்தை ரூபாய் 350 குதிரை வண்டிகாரனிடம் கொடுத்தோம்.
4 மணி நேர குதிரை சவாரிக்கு பிறகு தேவியை தரிசிக்கலாம். மலைக்கள்ளன் படத்தில் MGR குதிரை சவாரியை நினைத்துக்கொண்டு பயணத்தை சுகமாக்கிக்கொள்ளலாம். தவிர குதிரையும் டாக் டாக்கென்று அந்த மலையில் ஓட்டமும் நடையுமமாக செல்வதே நல்ல திரில்லிங். குதிரை சவாரியை பார்த்த வெள்ளைக்காரன் என்ஜினுக்கு ஹார்ட்ஸ் பவர் வைத்தானோ ஆனால் **ஜாவா புல்லட் ஓட்டும் போது கால் பேலன்சில் வண்டி ஓடும் ஹேண்டில் பாரே தேவையில்லை*அப்படி குதிரை சென்றது.
வழியில் குதிரை தண்ணிர் குடிக்க நிறுத்தினார்கள். குதிரைபாகனும் நம்மிடம் காசை வாங்கி பிஸ்கட் சுண்டல் முதலானவைகளை வாங்கி தானும் உண்டு குதிரைக்கும் கொடுத்தார்கள்.
மீண்டும் பயணம் சரியாக காலை 10.30 மணிக்கு கோவிலை அடைந்தோம். திருப்பதியை கற்பனையாக நினைத்தத நமக்கு கொஞ்சம் அதிர்ச்சி குருகலான இடம் மஹாமக கூட்டம் நெரிசல் கிட்டத்தட்ட 1கிலோமீட்டர் நடந்தே ஆகவேண்டும் கடுகு போட இடமில்லை. வெயில் இல்லை ஆனாலும் குளிரில்லை வியர்வையில்லை இருந்தாலும் மலைப்பாக இல்லை. தேவியே ஆனந்தம் தானே. நாங்கள் இறங்கிய இடத்திலிருந்து கீயூ நின்று கொண்டிருந்தது .
நாங்களும் கீயூவில் நின்று கொண்டோம் தேவியை தரிசிக்க மாலை வரை நேரமாகும் .மொழி தெரியாத ஒரு நபர் எங்களிடம் வந்து. நபருக்கு ரூ 600 தந்தால் நாங்கள் அம்பாளை அருகில் பார்க்க ஏற்பாடு செய்வதாய் சொன்னான். எனக்கு அவளவாக அவன் சொல்லியது புரியவில்லை ஆனால் என்னோடு வந்தவருக்கு புரிந்தது.
*இந்த இடத்தில் நாம் ஒன்றை சொல்லியாக வேண்டும் .வழி நேடுகிலும் கத்ரா நகரிலும் உள்ளூர் போலீசும் மத்திய எல்லை பாதுகாப்பு படை ஆயுதமேந்திய சிப்பாய்களும் 50அடிக்கு ஒரு இடத்தில் பாதுகாப்பில் இருந்தனர். இதை நாம் ஜம்முகாஷ்மீர் எல்லையை தொட்டவுடன் உணர்ந்தோம்.
*பொதுவாக ஜம்மு இந்துகள் பூபி கத்ராவில் பிராமணர்கள் அதிகம். நல்ல கலராகவும் அழகாகவும் இருந்தனர். பசுக்கள் ஏராளமாக இருந்தது. எருமை மாடுகளும் இருந்தன.பாலும் நல்ல சுவையாகவும் இருந்தது.
திரும்பவும் நம்மிடம் குருக்கு வழியில் தரிசனம் காண கூப்பிட்டவர் அனுகி நீங்கள் மத்திய காவல் படை அலுவலகம் அருகில் வாருங்கள் நான் உள்ளே கூட்டிச்செல்கிறேன் என்றவர் போன் நம்பரை கொடுத்துவிட்டு போனார். நாங்கள் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றோம். ஆனால் அவர் வரவில்லை இடைப்பட்ட நேரத்தில் கோயமுத்தூரை சேர்ந்த CRP போலீஸ் நம்மை பார்த்து .நீங்க தமிழர்களா என்று விசாரித்து அருகில் இருந்த CRP அலுவலகத்தில் தொடர்பு கொள்ள சொன்னார்.
*எங்களோடு வந்த ஒருவர் நேவியில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர் அவரது ID கார்டை காண்பித்தவுடன் எங்களுக்கு VIP தரிசனம் செய்ய எற்பாடு செய்தனர்.
போன் நம்பரை கொடுத்த ஆசாமி நம்மை போன் போட்டவாரு இருந்தார். நாங்கள் கிடு கிடு வென்று கோவிலின் வாசல் வரை வந்துவிட்டோம். எங்களை கம்ளீட்டாக சோதனை செய்தனர். செல் போன் முதலியவற்றை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒருவழியாக சோதனை முடிந்து உள்ளே சென்றோம்.
*ஒரு நான்கு நபர்கள் உள்ளே செல்லத்தக்க வகையில் குகை கிட்டத்தட்ட 75மீட்டர் தூரம். விளக்கு கான்கரீட் சுவர் என அமர்களமாய் உள்ளே சென்றோம். வெளியில் வருவதற்கு வேறு வழி. அருமையாக உள்ளே ஒரு பூசாரி அமர்ந்து கொண்டு கல்கண்டு தீர்த்தம் பிரசாதமாக வழங்கினார்.
*அம்மன் அற்புதமாக மூன்று பீடமாக இருந்தது. லஷ்மி சரஸ்வதி பார்வதியாக மூன்று பீடங்கள் உருவமில்லை பூக்களாலும் வாசனை திரவியத்தாலும் அலங்காரம் செய்திருந்தனர். தேவியர்கள் தரிசனம் மனதிற்கும் ஆன்மாவிற்கு தெம்பையும் நம்பிக்கையையும் அளித்தது.
*மதுரைகாளியை சிருவாச்சூரிலும்(மலையிலும்) முகாம்பிகையை கொல்லூர் மலையிலும் தரிசித்த நமக்கு இதன் ஆதியும் அந்தமுமாய் ஸ்ரீ வைஷ்ணவதேவி. பிரம்மிப்பு .தவிர நாங்கள் இந்த யாத்திரை செல்லும் முன்னர் எங்கள் ஊர் தேவி ஸ்ரீநாடியம்மனிடம் வேண்டி அனுமதி பெற்று அவளுடைய வீபூதி பிரசாதத்தை எங்கள் ஹெண்ட் பேகில் வைத்திருந்தோம். எங்களின் வழித்துணையாக ஸ்ரீநாடியம்மனும் எங்களோடு வந்ததாகவே உணர்ந்தோம். இப்போது நினைத்தாலும் உடம் சிலிர்கின்றது. *-The god and powers whereas we feels if that the light in frant of us
ஒரு பக்தரிடம் உள்ளூர் மொழியில் விசாரித்தோம். இந்த அடர்ந்த மலை காடுகளில் காலபைரவா என்ற அரக்கன் இருந்ததாகவும் அந்த அரக்கன் மக்களை இம்சை செய்ததாகவும் அரக்கனை யாராலும் வதம் செய்ய முடியாமல் போனதால் பார்வதியிடம் முறையிட்டனர்.அதன் பயனாக பார்வதி தேவி முப்பெரும் தேவியர்களாய் காட்சி கொடுத்து அந்த அரக்கர்களை அழித்ததார்களாம்* அப்போது தான் செய்த தவறை உணர்ந்து தேவியர்களிடம் சரணடைந்து. இன்றிலிருநேது பக்தர்களை காப்பேன் எனக்கு அருள் புரியவேண்டும் என நமஸ்காரம் செய்து கேட்டதன் பயனாய் தேவியர்கள் அந்த காலபைரவர் அரக்கனுக்கு இடம் கொடுத்து முக்தி கொடுத்தார்கள்.
அதனால் தேவியர்களை வணங்கி காலபைரவரை வணங்கினால் தான் அந்த யாத்திரை பூர்த்தியாகும். அந்த கோவில் அருகில் உள்ள மலையில் உள்ளது. அதற்கு நாங்கள் ரோப்காரில் போக முன்பே ரிசர்வு செய்திருந்தோம். நாள் ஒன்றுக்கு 6000 நபர்கள் வரை மட்டுமே அனுமதி அங்கிருந்து நடந்தே சென்று ரோப்கார் ஸ்டேஷனை அடைந்தோம்.
10 நிமிட ரோப்கார் பயணம் அருமையாக இருந்தது *காடும் மலையும் தேவியின் வீச்சை வனப்பை கண்கள் முன் காண்பித்தது.டிசம்பர் *ஜனவரி மாதமாக இருப்பின் மலையில் பனியும் ஐசையும் சிவனாக பார்க்கும் அற்புதம் கிடைத்திருக்கும்.
*பைரவரை வணங்கினோம் எங்கள் வைஷ்ணவதேவி யாத்திரை பயணம் முற்றுப்பெற்ற நிலையில்
தேவஸ்தான ஏற்பாடாக லங்கர் அதாவது திருப்பதி போல் அன்ன சத்திரம் என்றார்கள்.
நாங்கள் காத்திருந்து உள்ளே சென்றோம். சுட சுட அன்னம் டால் பருப்பு கூட்டு வாசனையாக இருந்தது. சுக்கா ரொட்டியும் இருந்தது.
செல்ப் சர்வீஸ் நாங்களே *பிளேட்டை எடுத்துக்கொண்டு சாதம் டால் ரொட்டியை சாப்பிட்டோம். பிரமாதம் காலையிலிருந்து சாப்பிடவில்லை நல்ல பசி அந்த சாப்பாடு தேவாமிருதமாய் இருந்தது. கூட **அந்த நவ காய்கறிகள் போட்ட ஊருகாய் இப்போது நினைத்தாலும் நாக்கில் எச்சில் ஊருகிறது.
*இப்படியாக ஸ்ரீவைஷ்ணவதேவி தரிசனம் கிடைத்தது
*குறிப்பு.
1.வரும்போது கால்நடையாக திரும்பினோம். ஆனால் அசதி ஏற்பட்டது.5 மணி நேரம் ஆகிறது.
2.நேராக நாம் சென்னையிலிருந்து ஜம்முவரை ரயிலில் செல்லலாம். ஜம்முவிலிருந்து *பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தூரம். கத்ரா வைஷ்ணவதேவி கோவில் பஸ்ஸிலோ காரிலோ போகலாம். கார் சிறப்பு.
ஜம்மு வரை ஏரிலும் போகலாம்.
நாங்கள் சென்னையிலிருந்து அமிர்சர்ஸ் வரை ஏர் அங்கிருந்து 6 மணி நேரம் கார் பயணம் சென்றோம். ஏர் மிக பாதுகாப்பு.
காஷ்மீர் ஒரு இனிய அனுபவம்.
அடுத்து காஷ்மீர் ஸ்ரீநகரை பற்றி எழுதுவோம்.
சுபம்.மங்களம்
Comments