top of page

வேத வித்யை

ஸ்ரீ ராமஜயம்

வேத வித்யை ஏன் எதற்கு ? என்பதைப்பற்றி இப்பொழுது சற்று சிந்திப்போம் .கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக வேத வித்யை கொஞ்சம் கொஞ்சமாக க்ஷீணித்து இப்பொழுது மிக கொஞ்சம் பேர்கள் தான் இதில் சிரத்தை காண்பித்து வேதத்தை கற்று வருகிறார்கள் . காலாந்தரத்தில் இவர்களும் மறைவார்கள் என்பதற்கான நிலையை நாம் இன்று காண முடிகிறது . இந்த நிலையை எப்படி சந்திப்பது என்பதுதான் இன்றைய ஆஸ்திகர்களின் சவாலாக காண்கிறது .

ஆக , இன்று நாம் செய்ய வேண்டியது நமது பிராமண சமூகத்தில் இதனைப்பற்றி ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் .

அதன்படி ,அவர்கள் இயல்பாகவே வேத வித்யையில் சிரத்தை கொள்ளுமாறு செய்ய வேண்டும் . அதற்கு முதலில் , அவர்கள் ஏன் இந்த வித்யையை புறக்கணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .

தற்கால பொருளாதார நிலைப்படி ,ஒவ்வொருவரும் தனது வாழ்வாதாரத்திற்காக உழைத்துத்த்தான் ஆக வேண்டியிருக்கிறது . அதற்கு வேத வித்யையை கற்பதற்காக தனது காலத்தை செலவிடுவது இடையூறென்று அவர்கள் நினைக்கிறார்கள். அது தவறானது என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இதைப்பற்றி இங்கு சற்று ஆலோசிப்போம் .

ஒருநாளைக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள 12 மணி நேரத்தில் , ஆகாரம் செய்வதற்கும் ,மாலையில் விளையாடுவதற்கும் ,மற்ற சில்லறை வேலைகளுக்குமாக 3 மணி நேரத்தை ஒதுக்கி விட்டால் , பாக்கியுள்ள 9 மணி நேரத்தில் 3மணி நேரம் வேத வித்யையில் செலவிட்ட பிறகு

6 மணி நேரம் ஆங்கிலம் சார்ந்த படிப்புக்கு கிடைக்கிறது . ஆக வேத வித்யையில் ஈடுபடும் ஒவ்வொரு மாணவனும் வேதத்துடன் ஆங்கிலம் சார்ந்த நவீன படிப்பையும் மேற்கொள்ள முடியும் . ஆதலால் நமது பள்ளிக்கூட பாட திட்டத்தை இவ்வாறான படிப்புக்கு தோதாக அமைத்துக்கொள்ளலாம் . அது ஹாஸ்டல் உடன் இருந்தால் சிலாக்கியம் . ஹாஸ்டலில் தங்கும் மாணவர்களுடன் சேர்ந்து வசிக்க ஒரு அத்யாபகரை

நியமித்து, அவர் ஹாஸ்டலில் தங்கும் மாணவர்களுக்கு உதவி செய்வதுடன் அவர்களின் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு செய்ய வேண்டும் .

நவீன முறைப்படிப்பும் இப்பள்ளிக்கூடங்களில் கிடைப்பதால் பிராமண பெற்றோர்கள் தங்களது பையன்களை இப்பள்ளிக்கூடங்களில் சேர்க்க தயங்க மாட்டார்கள். வேத வித்யையும் மேம்படும் .

ச. சிதம்பரேச ஐயர்

16 நவ 2022


16 views0 comments

Recent Posts

See All

தீபாவளியும் -மாப்பிள்ளை வருகையும்

தீபாவளி பண்டிகை பிராமணர்கள் குடும்பங்களில் கலாச்சாரங்களின் தொட்டில் ,தலை தீபாவளி மாமியார்களின் கடை கண் பார்வை மாப்பிள்ளையை நோக்கியதாகும்....

Comments


bottom of page