top of page

Yatra Update - Prayagraj

Prayagraj

30/06/2023


இன்று மாலை ஆச்சாரியாள் அவர்கள் சங்கர விமான மண்டபம் முழுவதும் தரிசனம் செய்தார்.

முதல் மாடியில் நுழைந்தவுடன் நம்மை கவரும் காட்சி ஶ்ரீ மீனாக்ஷி திருமணம்.

பின் ஶ்ரீ பிரம்மா, விமலா தேவி, பூர்ண கிரிதாரி அம்மன், ஶ்ரீ மஹா காளி அம்மன். ஶ்ரீ மகேஷ்வரி, சாரதா தேவி. கணபதி,ஶ்ரீ துவார சக்தி. ஶ்ரீ சரஸ்வதி நதி, ஶ்ரீ யமுனா நதி. ஶ்ரீ கங்கா நதி. தபஸ் காமாக்ஷி, துவார பாலகி, காமாக்ஷி, ஶ்ரீ வைஷ்ணவி,ஶ்ரீ காமகோடி, ஶ்ரீ விந்த்ய வாசினி, ஶ்ரீ மீனாக்ஷி, ஆதி சங்கரர், ஶ்ரீ சண்முகர், மூகாம்பிகா, விஷ்ணு துர்கா, கன்யாகுமரி , பஞ்சமுக காயத்ரி, விநாயகர்,சதுர்முக காயத்ரி. ஶ்ரீ வைஷ்ணவி .

முதல் மாடியில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு சித்திர வடிவில் உள்ளது.

காலடியில் பிறந்து, காலத்தை வென்று, நான் எனது என்பது இல்லாமல், நாம் நமது என்பதைக் கடந்து, நமது உண்மையான ஸ்வரூபத்தை நமக்கு காட்டி , சனாதன தர்மத்தை நிலை நாட்டி, பாரதம் என்பது தர்மத்தின் இருப்பிடம் என்று நிலை நாட்டி,நமக்கு வழி காட்டியவர் ஆதிசங்கரர் என்பதை சித்திரம் மூலம் மிக எளிமையாக அறிந்து கொள்ள முடிகிறது.


சக்தி பீடங்கள் அனைத்தையும் பார்க்கும் போது , அகண்ட பாரதம் ஒரு சக்தி ஸ்தலம் என்றால் மிகையாகாது.

முதல் மாடியில், சதுர் முக, பஞ்ச முக காயத்திரி முன் அமர்ந்து கொண்டு ஜெபம் செய்ய அமைதியான இடம். அமைதியான முகூர்த்த காலையில், ஜெபம் செய்தால், கங்கையின் அலை ஓசையை கேட்க முடியும். நமது எண்ணங்கள் கட்டுப்பாட்டில் இருந்து விட்டால், நாம் எட்டு திசையிலும் அமைதியைத் தவிர ,மௌனத்தை மட்டுமே உணர முடியும்.

மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் , சுந்தரேஸ்வரர் போல் நமது எண்ணங்களும் செயல்களும் இணைந்து விட்டால், கல்யாணம்,மங்கலம் மட்டும் நாம் பார்க்க முடியும். அதனால் தான் என்னவோ. முதல் மாடியில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருமணக் கோலம் நம்மை வரவேற்கிறது.

30 views0 comments

Commenti


bottom of page